புளிப் பொங்கல்


தேவையானப் பொருட்கள்

பச்சரிசி  - ஒன்றரை கப்
புளி         - பெரிய எலுமிச்சை பழ அளவு
வரமிளகாய் - எட்டு (தேவைக்கு ஏற்ப )
உப்பு         - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் - ரெண்டு ஸ்பூன்
கடுகு         - அரை ஸ்பூன்
கடலை பருப்பு - அரை ஸ்பூன்
கருவேப்பிலை  - தேவைக்கேற்ப
பெருங்காயம்  - விருப்பம் போல்

செய்முறை

முதலில் புளியை  ஊற வைத்துக் கொள்ளவும் . பின்  குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி அது காய்ந்தப் பிறகு கடுகு ,கடலைப் பருப்பு .கருவேப்பிலை ,வரமிளகாய்,பெருங்காயம் போட்டு வறுத்துக் கொள்ளவும். பின் புளிக் கரைச்சலை ஊற்றி கொதிக்க வைக்கவும். அது நன்றாகக் கொதித்தப் பின் அரிசியை அதில் போடவும். பின் இரண்டு நிமிடம் கழித்து உப்பு சேர்த்து நன்குக் கிளறி குக்கரை மூடி விசிலைப் போடவும். மூன்று அல்லது நான்கு விசில் விட்டுப் பின் அடுப்பை அணைத்து விடவும்.

பின் சிறிது நேரம் கழித்து அனைவருக்கும் பரிமாறவும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கடாய் தோசை

தேவையானவை

அரிசி மாவு                  ஒரு கப்

மைதா மாவு                ஒரு கப்

ரவை                                ஒன்றரை கப்

மக்காச்சோள மாவு ஒரு கப்

உப்பு                                  தேவையான அளவு

தேங்காய்த் துருவல் அரை கப்


தாளிக்கத் தேவையானவை

ஆயில்                              

கடுகு

உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு

பச்சை மிளகாய்


செய்முறை


அரிசி மாவு, மைதா, மக்காச்சோள மாவு ,ரவை ,தேங்காய்த் துருவல் மற்றும் உப்பை ஒரே பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். பின் தாளித்து அதில் கொட்டி தண்ணீர் சேர்த்து அடை மாவுக்கு அரைப்பது போல் கெட்டியாக கலந்துக் கொள்ளவும் .

பின் வாணலியில் ஊற்றி , வழக்கமாய் தோசை செய்வது போலவே செய்யவும். சன்னமாக செய்தால் வராது, எனவே கொஞ்சம் மொத்தமாக ஊற்றிக் கொள்ளவும்.



இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி சரியான காம்பினேஷன்.






  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மிளகுக் குழம்பு



வறுக்கத் தேவையானவை

துவரம் பருப்பு - 1 ஸ்பூன்

மிளகு - 1 1/2 ஸ்பூன்

சீரகம் - 1/2 ஸ்பூன்

வரமிளகாய் - இரண்டு

இவையுடன்

புளி - எலுமிச்சை பழம் அளவு

கருவேப்பிலை - 1 1/2  கப்

கடுகு - தாளிக்க தேவையான அளவு


செய்முறை


முதலில் ஒரு ஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி வறுக்கத் தேவையானவற்றில் சொல்லியுள்ளவற்றை போட்டு வறுத்துக்கொள்ளவும்.

பின்பு கருவேப்பிலையை அதனுடன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதை புளிக்கரைச்சலில் போட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும்.

பின் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கரைச்சலை நன்கு கொதிக்க வைக்கவும். எண்ணெய் தனியாகப் பிரிந்து மேலே தெரியும். அதுவரை கொதிக்க வைத்து பின் பரிமாறவும்.



சௌம்யா



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS