தேவையானப் பொருட்கள்
பச்சரிசி - ஒன்றரை கப்
புளி - பெரிய எலுமிச்சை பழ அளவு
வரமிளகாய் - எட்டு (தேவைக்கு ஏற்ப )
உப்பு - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் - ரெண்டு ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
கடலை பருப்பு - அரை ஸ்பூன்
கருவேப்பிலை - தேவைக்கேற்ப
பெருங்காயம் - விருப்பம் போல்
செய்முறை
முதலில் புளியை ஊற வைத்துக் கொள்ளவும் . பின் குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி அது காய்ந்தப் பிறகு கடுகு ,கடலைப் பருப்பு .கருவேப்பிலை ,வரமிளகாய்,பெருங்காயம் போட்டு வறுத்துக் கொள்ளவும். பின் புளிக் கரைச்சலை ஊற்றி கொதிக்க வைக்கவும். அது நன்றாகக் கொதித்தப் பின் அரிசியை அதில் போடவும். பின் இரண்டு நிமிடம் கழித்து உப்பு சேர்த்து நன்குக் கிளறி குக்கரை மூடி விசிலைப் போடவும். மூன்று அல்லது நான்கு விசில் விட்டுப் பின் அடுப்பை அணைத்து விடவும்.
பின் சிறிது நேரம் கழித்து அனைவருக்கும் பரிமாறவும்.






5 comments:
திவ்யாம்மா, ரொம்ப நாட்களுக்குப்பிறகு ஒரு சுவையான குறிப்புடன் வந்திருக்கீங்க. வாழ்த்துக்கள். அடிக்கடி வாங்க.
படிக்கவே நல்லாருக்குதே.
ஆமா, பயத்தம்பருப்பில்லாம பொங்கலா.. வித்தியாசமாவும் இருக்கு.
புளிப்பொங்கல் எனக்கு மிகவும் பிடித்தது.அப்பளம், வடாமுடன் அல்லது வெங்காய தயிர் பச்சடியுடன் பிரமாதமாக இருக்கும்.
பகிர்வுக்கு நன்றிங்க.
வித்தியாசமா இருக்கே.செஞ்சு பாத்துடலாம்.
அடிக்கடி பதிவு போடலாமே
த ம 1.இன்ட்லி 2
Post a Comment